உபதேசம் 0️⃣1️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 0️⃣1️⃣
தொழுகைக்காக பாங்கு சொல்லப் படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரியும்நிலையில் ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் வந்து தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் படி செய்துவிடுவான்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 6️⃣0️⃣8️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக