நற்பண்புகள். ( 51 )
நற்பண்புகள். ( 51 )
குற்றத்தை குறை வாக எண்ணாதீர்!
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
திருக்குர்ஆன் 47:33
அனஸ்(ரலி) அறிவித்தார். நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'மூபிகாத்' என்றே கருதிவந்தோம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்.
'மூபிகாத்' என்றால் 'பேரழிவை ஏற்படுத்துபவை' என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி : 6492.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக