நற்பண்புகள். ( 70 )
நற்பண்புகள். ( 70 )
சொத்துக்கு அடிமையாகாதீர்!
தர்மங்களில் (அதைப் பங்கிடுவதில்) உம்மைக் குறை கூறுவோரும் அவர்களில் உள்ளனர். அதில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றனர். அதில் அவர்களுக்குக் கொடுக்கப்படாவிட்டால் உடனே ஆத்திரம் கொள்கின்றனர்.
திருக்குர்ஆன் 9:58
அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 89:16
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2886.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக