நற்பண்புகள். ( 80 )

நற்பண்புகள். ( 80 )
மறுமையின் கடுமையை நினைவில் கொள்வீர்!

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
திருக்குர்ஆன் 79:13,14

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6527.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }