திருக்குர்ஆன் 49:13
முக அழகையோ, ஆடை அலங்காரங்களையோ இறைவன் பார்க்க விருப்பம் கொள்வதில்லை. உள்ளத்தில் எழும் நல்லெண்ணங்கள், இறைவனின் பொருத்தத்தைக் கருதி செய்கின்ற இறையச்ச உணர்வு இவற்றையே காண்கிறான். இதை, அடிப்படையாகக் கொண்டு நன்மைகளை ஏட்டில் பதிவு செய்கிறான்’, என்கின்றன நபி மொழிகள் .
“இறைவன் உங்கள் தோற்றத்தையோ, உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
“அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியமிக்கவர்
உங்களில் மிகுந்த இறையச்சமுடையவர்களாகும்”. (திருக்குர்ஆன் 49:13)
கருத்துகள்
கருத்துரையிடுக