இதுதான் குர்ஆன். { 4 }
இதுதான் குர்ஆன். { 4 } வரம்பு மீறியவர்களை எச்சரிக்கும் குர்ஆன். வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது. திருக்குர்ஆன் 4:30 நம்பிக்கை கொண்டோர் விஷயத்தில் உறவையோ, உடன்படிக்கையையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள். திருக்குர்ஆன் 9:10 (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் நட்டமடைந்தான். அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். திருக்குர்ஆன் 14:15,16 வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன் 78:21,22 யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம். திருக்குர்ஆன் 79:37, 38,39 📖 📖 📖 📖 📖 📖 📖 📖