இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குர்ஆன் 2:214

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (திருக்குர்ஆன் 2:214)

உபதேசம் 4️⃣1️⃣

‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 4️⃣ 1️⃣ நபி (ﷺ) அவர்கள் "குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது“ என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் ( ரலி ) நூல் : புகாரி 7️⃣ 5️⃣ 6️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 3️⃣ 0️⃣ ▪️ 0️⃣ 4️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் அவன் உம்மை ஏழையாகக் கண்டு, பின்னர் தன்னிறைவு அடைந்தவராக்கினான். திருக்குர்ஆன் : அல்லுஹா 9️⃣ 3️⃣ வது அத்தியாயம் 8️⃣ வது வசனம்

உபதேசம் 4️⃣0️⃣

‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 4️⃣ 0️⃣ "தொழுகையில் (நிற்கும்போது) ஒருவர் தமது வலக் கையை (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன்கையின் மீது வைக்க வேண்டுமென மக்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது". அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் ( ரலி ) நூல் : புகாரி 7️⃣ 4️⃣ 0️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 9️⃣ ▪️ 0️⃣ 4️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் உம்மை வழியறியாதவராகக் கண்டு, பின்னர் நேர்வழி காட்டினான். திருக்குர்ஆன் : அல்லுஹா 9️⃣ 3️⃣ வது அத்தியாயம் 7️⃣ வது வசனம்

அல்குர்ஆன்: 3:79

“வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.) (அல்குர்ஆன்: 3:79)

நற்பண்புகள். ( 68 )

நற்பண்புகள். ( 68 ) தவறான வழிகாட்லை ஏற்காதீர்! நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். திருக்குர்ஆன் 4:59 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2955. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 67 )

ஹதீஸ் கற்போம். ( 67 ) وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الأَوْثَانِ வயன்ஹாகும் அன் இபா(B)ததில் அவ்சானி. சிலை வணக்கங்களிலிருந்து உங்களைத் தடுக்கிறார். ஸஹீஹ் புகாரி : 7. وَيَنْهَاكُمْ {வயன்ஹாகும்} உங்களைத் தடுக்கிறார். عَنْ عِبَادَةِ {அன் இபா(B)ததி} வணக்கங்களிலிருந்து, الأَوْثَانِ {அல்அவ்சானி} சிலை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

அல்குர்ஆன், 25:75

“அவர்கள் பொறுமையின் காரணமாக (சொர்க்கத்தில்) உயர்ந்த இடத்தைப் பெறுவார்கள். அங்கு அவர்கள் வாழ்த்துக்களுடன் சமாதானம் மற்றும் மரியாதையுடன் சந்திக்கப்படுவார்கள். (அல்குர்ஆன், 25:75)

ஹதீஸ் கற்போம். ( 66 )

ஹதீஸ் கற்போம். ( 66 ) وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا வலா துஷ்ரிகூ பி(B)ஹி ஷைய்அன். அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. ஸஹீஹ் புகாரி : 7. وَلاَ تُشْرِكُوا {வலா துஷ்ரிகூ} இணையாக்கக் கூடாது. بِهِ {பி(B)ஹி} அவனுக்கு, شَيْئًا {ஷைய்அன்} எதனையும், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

நற்பண்புகள். ( 67 )

நற்பண்புகள். ( 67 ) அல்லாஹ்விற்காக நேசிப்பீர்! ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். திருக்குர்ஆன் 59:9 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?" என்று அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார். அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்" என்று கூறினார். அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக...

அல்குர்ஆன் 16:70

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 16:70

நற்பண்புகள். ( 66 )

நற்பண்புகள். ( 66 ) நண்பரை சந்திப்பீர்! நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். திருக்குர்ஆன் 9:71 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நான் நேயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.) அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : புகாரி 5664 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 65 )

ஹதீஸ் கற்போம். ( 65 ) فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ ஃபதகர்த அன்னஹு யஃமுருகும் அன் தஃபு(B)துல்லாஹ. அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் குறிப்பிட்டீர். ஸஹீஹ் புகாரி : 7. فَذَكَرْتَ {ஃபதகர்த} நீர் குறிப்பிட்டீர். أَنَّهُ {அன்னஹு} அவர், يَأْمُرُكُمْ {யஃமுருகும்} உங்களுக்கு ஏவுவதாகவும், أَنْ تَعْبُدُوا {அன் தஃபு(B)து} வணங்க வேண்டும் என்றும், اللَّهَ {அல்லாஹ} அல்லாஹ்வையே, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

அல்குர்ஆன் 25:43

தினமும் ஒரு குர்ஆன் வசனம் 27-04-2024 சனிக்கிழமை ﷽ اَرَءَيۡتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ ؕ اَفَاَنۡتَ تَكُوۡنُ عَلَيۡهِ وَكِيۡلًا ۙ‏ தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா? [அல்குர்ஆன் 25:43]

தினம் ஒரு நபிமொழி

அஸ்ஸலாமு அலைக்கும் தினம் ஒரு நபிமொழி 27-04-2024 சனிக்கிழமை ﷽ "நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள்! ஏனெனில் அது பிராா்தனை ஏற்கப்படும் நேரமாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்! (அது உங்களுக்கு பாதகமாக அமைந்துவிடும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் - 5736

அல்குர்ஆன் 16:70

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 16:70

அல்குர்ஆன்: 23: 14

இறைவனைப் பற்றிய தேடலைத் துவக்கினால் அல்குர்ஆனின் 6666 வசனங்களிலும் கோடான கோடி விடைகளும், தெளிவுகளும் நம் அகக்கண் முன்னாலும், புறக்கண் முன்னாலும் வந்து குவியும். “மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் செலுத்தப்பட்ட விந்தாக ஆக்கினோம். பிறகு, அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளை சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் நிறைந்தவன் மனிதன்”. ( அல்குர்ஆன்: 23: 14 )

திருக்குர்ஆன் 62:10

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன் 62:10

நூல் : புகாரி 4797

இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள். 👇 அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத். (பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ﷺ) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ﷺ) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்). 💫 அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல் : புகாரி 4797 💫

நூல் : முஸ்லிம், எண் : 5318.

அவனுக்கு ஒரு தீங்கு, சிரமம், துன்பம், மனதை வறுத்தக் கூடிய ஒன்று நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருக்கிறான். எனவே, அந்த தீமையும் அவனுக்கு நன்மையாக மாறிவிடுகிறது. அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5318.

திருக்குர்ஆன் 62:9,10

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன் 62:9,10

நற்பண்புகள். ( 65 )

நற்பண்புகள். ( 65 ) கேள்விகளைத் தவிர்ப்பீர்! நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். திருக்குர்ஆன் 5:101 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான். என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5975. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 64 )

ஹதீஸ் கற்போம். ( 64 ) وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ வசஅல்துக பி(B)மா யஃமுருகும். எதை உங்களுக்கு கட்டளையிடுகிறார்? (என்று) உம்மிடம் கேட்டேன். ஸஹீஹ் புகாரி : 7. وَسَأَلْتُكَ {வசஅல்துக} உம்மிடம் கேட்டேன். بِمَا {பி(B)மா} எதை, يَأْمُرُكُمْ {யஃமுருகும்} உங்களுக்கு கட்டளையிடுகிறார்? 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 3️⃣6️⃣

‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 3️⃣ 6️⃣ நபி (ﷺ) அவர்கள் "தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடா மல்) நிறைவாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள்." அறிவிப்பவர் : அனஸ் ( ரலி ) நூல் : புகாரி 7️⃣ 0️⃣ 6️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 5️⃣ ▪️ 0️⃣ 4️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் யாருக்கும் திருப்பிச் செலுத்த வேண்டிய எந்தக் கைம்மாறும் அவருக்கு இருக்கவில்லை. உயர்ந்தவனாகிய அல்லாஹ்வின் முகத்தை நாடுவதைத் தவிர! விரைவில் அவர் திருப்தியடைவார். திருக்குர்ஆன் : அல் லைல் 9️⃣ 2️⃣ வது அத்தியாயம் 1️⃣ 9️⃣ , 2️⃣ 0️⃣ , 2️⃣ 1️⃣ வது வசனம்

ஸஹீஹ் புகாரி : 568

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. திருக்குர்ஆன் 8:11 உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம். திருக்குர்ஆன் 78:9 அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். 'நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' ஸஹீஹ் புகாரி : 568.

நூல்: புகாரீ 5200

"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின்உமர்(ரலீ) நூல்: புகாரீ 5200

நற்பண்புகள். ( 64 )

நற்பண்புகள். ( 64 ) இரவுப் பேச்சைத் தவிர்ப்பீர்! உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. திருக்குர்ஆன் 8:11 அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். திருக்குர்ஆன் 25:47 உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம். திருக்குர்ஆன் 78:9 அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.' ஸஹீஹ் புகாரி : 568. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 63 )

ஹதீஸ் கற்போம். ( 63 ) وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ வகதலிகர் ருசூலு லா தக்திரு. அப்படித்தான், திருத்தூதர்கள் வாக்கு மீற மாட்டார்கள். ஸஹீஹ் புகாரி : 7. وَكَذَلِكَ {வகதலிக} அப்படித்தான், الرُّسُلُ {அர்ருசூலு} திருத்தூதர்கள், لاَ تَغْدِرُ {லா தக்திரு} வாக்கு மீற மாட்டார்கள். 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

அல்குர்ஆன் 2:221

அல்லாஹ், தனது ஆணைப்படி சொர்க்கத்தையும் மன்னிப்பையும் நோக்கி அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்குத் தனது வசனங்களை அவன் தெளிவுபடுத்துகிறான். அல்குர்ஆன் 2:221

உபதேசம் 3️⃣5️⃣

‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 3️⃣ 5️⃣ நபி (ﷺ) அவர்கள் "உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்களும் நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும்போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளட்டும்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி ) நூல் : புகாரி 7️⃣ 0️⃣ 3️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 4️⃣ ▪️ 0️⃣ 4️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் அவனே பொய்யெனக் கூறிப் புறக்கணித்தான்.இறையச்சமுடையவர் அதைவிட்டும் தூரமாக்கப்படுவார். அவர் தூய்மையடைவதற்காகத் தனது செல்வத்தைக் கொடுத்தவர். திருக்குர்ஆன் : அல் லைல் 9️⃣ 2️⃣ வது அத்தியாயம் 1️⃣ 6️⃣ , 1️⃣ 7️⃣ , 1️⃣ 8️⃣ வது வசனம்