இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தினமும் ஓர் உபதேசம் 1️⃣0️⃣

. 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 1️⃣ 0️⃣ (மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்க ளைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப் பேற்றிடாதீர்கள்! என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ( ரலி ) நூல் : புகாரி 6️⃣ 9️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 3️⃣ 0️⃣ ▪️ 0️⃣ 3️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் “எனது (இந்த) வாழ்வுக்காக நான் (நற்செயல்களை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!” எனக் கூறுவான். திருக்குர்ஆன் : அல் ஃபஜ்ர் 8️⃣ 9️⃣ வது அத்தியாயம் 2️⃣ 4️⃣ வது வசனம் ۙ‏‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴

நற்பண்புகள். ( 45 )

நற்பண்புகள். ( 45 ) பொய்ச் சத்தியம் செய்யாதீர்! நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான். திருக்குர்ஆன் 9:96 அபூஉமாமா அல்ஹாரிஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 218. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 44 )

ஹதீஸ் கற்போம். ( 44 ) قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ கால ஃபகைஃப கான கிதாலுகும் இய்யாஹு. அவருடன் நீங்கள் நடத்திய போர் எவ்வாறிருந்தன? என்று கேட்டார். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} என்று கேட்டார். فَكَيْفَ كَانَ {ஃபகைஃப கான} எவ்வாறிருந்தன? قِتَالُكُمْ {கிதாலுகும்} நீங்கள் நடத்திய போர், إِيَّاهُ {இய்யாஹு} அவருடன், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 33 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 33 ) வீட்டில் உளூச் செய்தல். அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) தொழுகை நேரம் வந்தது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் வீடு அமைந்திருந்தவர்களெல்லாம் உளூச் செய்ய எழுந்தனர். (பள்ளிவாசல் அருகில் வீடில்லாத) ஒரு கூட்டத்தார் (உளூச் செய்ய வழியறியாமல்) எஞ்சியிருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் தண்ணீருள்ள கல்லால் ஆன ஏனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் (அதில்) தம் கையை வைத்(துப் பார்த்)தார்கள். அதில் நபி(ஸல்) தம் கரத்தை விரித்து வைக்கும் அளவுக்கு அந்தக்கல் ஏனம் பெரிதாக இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் விரல்களை இணைத்து கல் ஏனத்தில் வைத்தார்கள். மக்கள் அனைவரும் (அதிலிருந்து) உளூச் செய்தனர். ஸஹீஹ் புகாரி : 3575.

நற்பண்புகள். ( 44 )

நற்பண்புகள். ( 44 ) அவதூறு கற்பிக்காதீர்! நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 24:23 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 6857. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 43 )

ஹதீஸ் கற்போம். ( 43 ) قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ قُلْتُ نَعَمْ கால ஃபஹல் கதல்துமூ குல்து நஅம். அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?என்று கேட்டார். ஆம் என்றேன். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} என்று கேட்டார். فَهَلْ قَاتَلْتُمُوهُ {ஃபஹல் கதல்துமூ} அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா? قُلْتُ {குல்து} என்றேன். نَعَمْ {நஅம்} ஆம், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 32 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 32 ) பள்ளிக்கு வந்தால் தகுதிகள் உயரும். ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் 'இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!' என்றும் கூறுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 647.

ஹதீஸ் கற்போம். ( 40 )

ஹதீஸ் கற்போம். ( 40 ) قَالَ فَهَلْ يَغْدِرُ قُلْتُ لاَ கால ஃபஹல் யஃதிரு குல்து லா. அவர் வாக்கு மீறியது உண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} என்று கேட்டார். فَهَلْ يَغْدِرُ {ஃபஹல் யஃதிரு} அவர் வாக்கு மீறியது உண்டா? قُلْتُ {குல்து} என்றேன். لاَ {லா} இல்லை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

நற்பண்புகள். ( 41 )

நற்பண்புகள். ( 41 ) பிறரை சாபமிடாதீர்! இங்கேயும், கியாமத் நாளிலும் அவர்களைச் சாபம் விரட்டியது. வழங்கப்படும் இக்கூலி மிகவும் கெட்டது. திருக்குர்ஆன் 11:99 ஒரு அடியான் எதாவது ஒரு பொருளை சபித்தால் அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும். அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால் யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின்பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால் சொன்னவரிடமே திரும்பிச் சென்றுவிடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபுதர்தா (ரலி) அறிவித்தார். நூல் : அபூதாவூத் - 4905. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 30 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 30 ) பள்ளியில் இருந்து வெளியேறக் கூடாது. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 1160.

ஹதீஸ் கற்போம். ( 41 )

ஹதீஸ் கற்போம். ( 41 ) لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا லா நத்(D)ரீய் மா ஹுவ ஃபாயிலுன் ஃபீய்ஹா. அதில் அவர் எப்படி செய்ய போகிறார்? எங்களுக்குத் தெரியாது. ஸஹீஹ் புகாரி : 7. لاَ نَدْرِي {லா நத்(D)ரீய்} எங்களுக்குத் தெரியாது. مَا هُوَ فَاعِلٌ {மா ஹுவ ஃபாயிலுன்} அவர் எப்படி செய்ய போகிறார்? فِيهَا {ஃபீய்ஹா} அதில், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

நற்பண்புகள். ( 42 )

நற்பண்புகள். ( 42 ) முறையின்றி பேசாதீர்! உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. திருக்குர்ஆன் 24:15 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து "இறைமறுப்பாளனே!" ("காஃபிரே!") என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 111. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 31 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 31 ) ஜமாஅத் தொழுகை யின் நன்மைகள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 477. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 645.

ஹதீஸ் கற்போம். ( 42 )

ஹதீஸ் கற்போம். ( 42 ) قَالَ وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الْكَلِمَةِ கால வலம் தும்கின்னிய் கலிமதுன் உத்கிலு ஃபீய்ஹா ஷைய்அன் கைரு அதிஹில் கலிமதி. அந்த வார்த்தையைவிட்டால் அதில் வேறு எந்த வார்த்தையையும் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! என்று அவர் சொன்னார். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} அவர் சொன்னார், وَلَمْ تُمْكِنِّي {வலம் தும்கின்னிய்} எனக்கு வாய்ப்பில்லை. كَلِمَةٌ {கலிமதுன்} எந்த வார்த்தையையும், أُدْخِلُ {உத்கிலு} நுழைத்திட, فِيهَا {ஃபீய்ஹா} அதில், شَيْئًا {ஷைய்அன்} வேறு, غَيْرُ {கைரு} விட்டால், هَذِهِ {அதிஹி} அந்த, الْكَلِمَةِ {அல்கலிமதி} வார்த்தையை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

நற்பண்புகள். ( 43 )

நற்பண்புகள். ( 43 ) அசிங்கமாக பேசாதீர்! அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,அறிந்தவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:148 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார் நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்' என்று கூறுவார்கள்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 6035. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 29 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 29 ) பாங்கு சொல்வரை நியமித்தல். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி) அவர்கள்; மற்றொருவர் கண்பார்வை இழந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 624.

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 28 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 28 ) மதினாவில் முதல் தொழுகை. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சாலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் 'குபா' பள்ளிவாசலில் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார்கள். அந்த நபித்தோழர்களில் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), அபூ ஸலமா(ரலி), ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி), ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) ஆகியோரும் அடங்குவர். ஸஹீஹ் புகாரி : 7175

அல்குர்ஆன் (2:267).

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அல்குர்ஆன் (2:267).

ஹதீஸ் கற்போம். ( 39 )

ஹதீஸ் கற்போம். ( 39 ) قَالَ فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لاَ கால ஃபஹல் குன்தும் தத்தஹிமூனஹு பி(B)ல்கதிபி(B) கப்(B)ல அன்யகுல மா கால குல்து லா. இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} என்று கேட்டார். فَهَلْ {ஃபஹல்} எப்போதாவது, كُنْتُمْ {குன்தும்} நீங்கள், تَتَّهِمُونَهُ {தத்தஹிமூனஹு} சந்தேகித்ததுண்டா? بِالْكَذِبِ {பி(B)ல்கதிபி(B)} அவர் பொய், قَبْلَ {கப்(B)ல} முன், أَنْ يَقُولَ {அன்யகுல} சொல்லக் கூடியவர், مَا قَالَ {மா கால} இவ்வாறு வாதிப்பதற்கு, قُلْتُ {குல்து} என்றேன். لاَ {லா} இல்லை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

நற்பண்புகள். ( 40 )

நற்பண்புகள். ( 40 ) பிறரை வரம்பு மீறிப் புகழாதீர்! தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. திருக்குர்ஆன் 3:188 அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், 'அந்த மனிதரின் முதுகை 'அழித்துவிட்டீர்கள்' அல்லது 'ஒடித்து விட்டீர்கள்' என்று (கடிந்து) கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 6060. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

நூல்: புகாரி 1903

நோன்பின் நோக்கம் யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

நற்பண்புகள். ( 39 )

நற்பண்புகள். ( 39 ) கோள் சொல்லாதீர்! அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன். திருக்குர்ஆன் 68:11 ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார் நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்' என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 6056. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 38 )

ஹதீஸ் கற்போம். ( 38 ) قَالَ فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ لاَ கால ஃபஹல் யர்தத்து அஹதுன் மின்கும் ஸஹ்ததன் லிதீய்னிகி பஃத அன் யத்ஹுல ஃபீய்ஹி குல்து லா. உங்களில் அதனால் அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?' என்று கேட்டார். இல்லை என்றேன். ஸஹீஹ் புகாரி : 7. قَالَ {கால} என்று கேட்டார். فَهَلْ {ஃபஹல்} அதனால், يَرْتَدُّ {யர்தத்து} மதம் மாறியிருக்கின்றனரா? أَحَدٌ {அஹதுன்} யாரேனும், مِنْهُمْ {மின்கும்} உங்களில், سَخْطَةً {ஸஹ்ததன்} அதிருப்தியுற்று, لِدِينِهِ {லிதீய்னிகி} அவரின் மார்க்கத்தில், بَعْدَ {பஃத} பின், أَنْ يَدْخُلَ {அன் யத்ஹுல} நுழைந்த, فِيهِ {ஃபீய்ஹி} அதன் மீது, قُلْتُ {குல்து} என்றேன். لاَ {லா} இல்லை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 27 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 27 ) தொழுவதால் வீட்டுக்கு நன்மை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்:1428

தினமும் ஓர் உபதேசம் 0️⃣3️⃣

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 0️⃣ 3️⃣ நபி (ﷺ) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக)இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை; மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரலி) நூல் : புகாரி 2️⃣ 1️⃣ 8️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 3️⃣ ▪️ 0️⃣ 3️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். திருக்குர்ஆன் : அல் ஃபஜ்ர் 8️⃣ 9️⃣ வது அத்தியாயம் 1️⃣ 4️⃣ வது வசனம் ۙ‏‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴

நற்பண்புகள். ( 38 )

நற்பண்புகள். ( 38 ) பொய் சாட்சி கூறாதீர்! அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். திருக்குர்ஆன் 25:72 அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது 'பொய் பேசுவது' ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'பொய் சாட்சி' என்பதை நபி(ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் 'அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!' என்று கூறினோம். ஸஹீஹ் புகாரி : 6919. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻