இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உபதேசம் 978

﷽ உபதேசம் 978 28-02-2024 புதன்கிழமை நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் உபவாசத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு சஹர் நேரத்தில் உண்பதுதான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) முஸ்லிம் : 2001

குர்ஆன் வசனம் 728

﷽ குர்ஆன் வசனம் 728 28-02-2024 புதன்கிழமை فَاَمَّا مَنۡ اَعۡطٰى وَاتَّقٰىۙ‏ ﴿۵﴾ وَصَدَّقَ بِالۡحُسۡنٰىۙ‏ ﴿۶﴾ فَسَنُيَسِّرُهٗ لِلۡيُسۡرٰىؕ‏ ﴿۷﴾ யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். [அல்குர்ஆன் 92:5-7]

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 2 )

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 2 ) அல்லாஹ் கட்டும் பள்ளிவாசல். “அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான், என்று நபி(ஸல்) கூற செவியுற்றுள்ளேன்.” என உஸ்மான்(ரலி) கூறினார். ஸஹீஹ் புகாரி : 450.

உபதேசம் 977

﷽ உபதேசம் 977 27-02-2024 செவ்வாய்கிழமை ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து கொண்டு செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) புகாரி : 1315

குர்ஆன் வசனம் 727

﷽ குர்ஆன் வசனம் 727 27-02-2024 செவ்வாய்கிழமை بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ‏﴿۱۶﴾ وَالۡاٰخِرَةُ خَيۡرٌ وَّ اَبۡقٰىؕ‏ ﴿۱۷﴾ ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். [அல்குர்ஆன் 87:16,17]

நற்பண்புகள். ( 17 )

நற்பண்புகள். ( 17 ) இறைவழி உயிர் தியாகமே சிறந்தது! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது. திருக்குர்ஆன் 3:157 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2817. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 16 )

ஹதீஸ் கற்போம். ( 16 ) جَالِسٌ عَلَى كُرْسِيٍّ ஜாலிஸுன் அலா குர்ஸிய்யின். ஓர் ஆசனத்தின் மேலே அமர்ந்திருக்க கண்டார். ஸஹீஹ் புகாரி : 4. جَالِسٌ அமர்ந்திருக்கக் கண்டார். عَلَى மேலே, كُرْسِيٍّ ஓர் ஆசனத்தின், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 976

﷽ உபதேசம் 976 26-02-2024 திங்கள்கிழமை நாங்கள் (பெண்கள்) இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம். ஆனால்,வன்மையாகத் தடுக்கப்பட்டோமில்லை. அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி) முஸ்லிம் : 1705

குர்ஆன் வசனம் 726

﷽ குர்ஆன் வசனம் 726 26-02-2024 திங்கள்கிழமை قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَكّٰىۙ‏ ﴿۱۴﴾ தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். [அல்குர்ஆன் 87:14]

நற்பண்புகள். ( 16 )

நற்பண்புகள். ( 16 ) குர்ஆனில் அதிகம் கவனம் செலுத்துவீர்! சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள்கள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலைநாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது. திருக்குர்ஆன் 17:78 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு. 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாக்குவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை. ஸஹீஹ் புகாரி : 1347. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 15 )

ஹதீஸ் கற்போம். ( 15 ) بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ பை(B)ய்னஸ் ஸமாயி வல்அர்லி. வானத்துக்கும் பூமிக்குமிடையே, ஸஹீஹ் புகாரி : 4. بَيْنَ {பை(B)ய்ன} இடையே, السَّمَاءِ {அஸ்ஸமாயி} வானத்துக்கும், وَالأَرْضِ {வல்அர்லி} பூமிக்கும், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 974

﷽ உபதேசம் 974 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : 1597

குர்ஆன் வசனம் 724

﷽ குர்ஆன் வசனம் 724 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை اِنَّ الَّذِيۡنَ فَتَـنُوا الۡمُؤۡمِنِيۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ يَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ الۡحَرِيۡقِؕ நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. [அல்குர்ஆன் 85:10]

நற்பண்புகள். ( 15 )

நற்பண்புகள். ( 15 ) இளமையின் பயன் முதுமையில் உண்டு! நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். திருக்குர்ஆன் 8:10 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது அவனுக்கு எழுதப்படும். இதை அறிவித்த அபூ புர்தா(ரஹ்), 'இதைப் பலமுறை (என் தந்தை) அபூ மூஸா அஷ்அரீ(ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்' என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் இப்னு அபீ கப்ஷா(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 2996. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 14 )

ஹதீஸ் கற்போம். ( 14 ) فَرَفَعْتُ بَصَرِي ஃபர ஃபஃது பசரிய். என் பார்வையை உயர்த்தி பார்த்தேன். ஸஹீஹ் புகாரி : 4. فَرَفَعْتُ {ஃபர ஃபஃது} உயர்த்திப் பார்த்தேன். بَصَرِي {பசரிய்} என் பார்வையை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 973

﷽ உபதேசம் 973 24-02-2024 சனிக்கிழமை நபி (ஸல்) அவர்களுடைய தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன. அறிவிப்பவர் ஜாபிர் பின் சமுரா (ரலி) முஸ்லிம் : 1571

குர்ஆன் வசனம் 723

﷽ குர்ஆன் வசனம் 723 24-02-2024 சனிக்கிழமை وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன். [அல்குர்ஆன் 85:9]

நற்பண்புகள். ( 14 )

நற்பண்புகள். ( 14 ) இளமைக்கால தர்மமே சிறந்தது! உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! திருக்குர்ஆன் 63:10 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்' என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 2748. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 13 )

ஹதீஸ் கற்போம். ( 13 ) إِذْ سَمِعْتُ صَوْتًا، مِنَ السَّمَاءِ இத் சமிய்து சவ்தன் மினஸ்ஸமாயி. வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். ஸஹீஹ் புகாரி : 4. إِذْ سَمِعْتُ {இத் சமிய்து} கேட்டேன். صَوْتًا {சவ்தன்} ஒரு குரலை, مِنَ {மின} இருந்து, السَّمَاءِ {அஸ்ஸமாயி} வானத்தில். 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 972

﷽ உபதேசம் 972 23-02-2024 வெள்ளிக்கிழமை மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 1.சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை, 2.ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை. 3.சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை. அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) முஸ்லிம் : 1511

குர்ஆன் வசனம் 722

﷽ குர்ஆன் வசனம் 722 23-02-2024 வெள்ளிக்கிழமை فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ‏ ﴿۷﴾ فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيۡرًا ۙ ‏﴿۸﴾ யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். [அல்குர்ஆன் 84:7-8]

நற்பண்புகள். ( 13 )

நற்பண்புகள். ( 13 ) ஏழைகளை மகிழ்விப்பீர்! அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். திருக்குர்ஆன் 76:8 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரைஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுததார்கள். ஸஹீஹ் புகாரி : 1507. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 12 )

ஹதீஸ் கற்போம். ( 12 ) بَيْنَا أَنَا أَمْشِي பை(B)ய்னா அனா அம்ஷிய். நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஸஹீஹ் புகாரி : 4. بَيْنَا {பை(B)ய்னா} கொண்டிருந்த போது, أَنَا {அனா} நான். أَمْشِي {அம்ஷிய்} நடந்து சென்று, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் 971

﷽ உபதேசம் 971 22-02-2024 வியாழக்கிழமை உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) முஸ்லிம் : 1381

குர்ஆன் வசனம் 721

﷽ குர்ஆன் வசனம் 721 22-02-2024 வியாழக்கிழமை يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ⭘ அந்நாளில் மக்கள், அகிலங்களின் இறைவன் முன்னிலையில் நிற்பார்கள். அல் குர்ஆன் - 83 : 6

உபதேசம்: 970

﷽ உபதேசம்: 970 21-02-2024 புதன்கிழமை "கொந்தளிப்பான காலத்தில் இறைவனை வழிபடுவது, நாடு துறந்து என்னோடு ஹிஜ்ரத் செய்வதைப் போன்றதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மஅகில் பின் யசார் (ரலி) முஸ்லிம்-5649

குர்ஆன் வசனம் 720

﷽ குர்ஆன் வசனம் 720 21-02-2024 புதன்கிழமை وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ‏ அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! [அல்குர்ஆன் 83:1]

நற்பண்புகள். ( 12 )

நற்பண்புகள். ( 12 ) தர்மம் வழங்குவீர்! நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! திருக்குர்ஆன் 2:267 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1410. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 11 )

ஹதீஸ் கற்போம். ( 11 ) وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ வ துயினு அலா நவாயிபி(B)ல் ஹக்கி. உண்மையான சோதனைகளில் உதவி புரிகிறீர்கள். ஸஹீஹ் புகாரி : 3. وَتُعِينُ {வ துயினு} உதவி புரிகிறீர்கள். عَلَى نَوَائِبِ{அலா நவாயிபி} சோதனைகளில், الْحَقِّ {அல்ஹக்கி} உண்மையான, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் : 969

﷽ உபதேசம் : 969 20-02-2024 செவ்வாய்க்கிழமை நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபொழுது அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாத்து ஜாமிஆ" (தொழுகைக்காக கூடுங்கள்) என்று அறிவிக்கச் செய்தார்கள். மக்கள் கூடியதும் முன்னே சென்று "தக்பீர்" கூறி, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்து தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-1646

குர்ஆன் வசனம் 719

﷽ குர்ஆன் வசனம் 719 20-02-2024 செவ்வாய்க்கிழமை يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَيۡـــًٔا‌ ؕ وَالۡاَمۡرُ يَوۡمَٮِٕذٍ لِّلَّهِ அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே. [அல்குர்ஆன் 82:19]

நற்பண்புகள். ( 11 )

நற்பண்புகள். ( 11 ) விதியின் கேட்டி லிருந்து பாதுகாப்பு! உமது இறைவனிடமிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவும், விதியும் முந்தியிருக்காவிட்டால் (அழிவு) நிச்சயமாகி இருக்கும். திருக்குர்ஆன் 20:129 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 6616. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 10 )

ஹதீஸ் கற்போம். ( 10 ) وَتَقْرِي الضَّيْفَ வ தக்ரில் லைய்ஃப விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். ஸஹீஹ் புகாரி : 3.  وَتَقْرِي     {வ தக்ரி} உபசரிக்கிறீர்கள். الضَّيْفَ   {அல்லைய்ஃப} விருந்தினர்களை, 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

உபதேசம் 968

﷽ உபதேசம் 968 19-02-2024 திங்கட்கிழமை "எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை! அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும்! எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) புகாரி - 1042

குர்ஆன் வசனம் 718

﷽ குர்ஆன் வசனம் 718 19-02-2024 திங்கட்கிழமை اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۚ‏ وَاِنَّ الۡفُجَّارَ لَفِىۡ جَحِيۡمٍ ۚۖ ‏ நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள். பாவிகள் நரகில் இருப்பார்கள். [அல்குர்ஆன் 82: 13,14]

நற்பண்புகள். ( 10 )

நற்பண்புகள். ( 10 ) கப்ரு வேதனையை காக்க வேண்டுவீர்! அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்). திருக்குர்ஆன் 6:93 மஸ்ரூக் அறிவித்தார். ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது' எனக் கூறினார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. ஸஹீஹ் புகாரி : 1372. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 9 )

ஹதீஸ் கற்போம். ( 9 ) وَتَكْسِبُ الْمَعْدُومَ வ தக்ஸிபு(B)ல் மஃதூம வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். ஸஹீஹ் புகாரி : 3. وَتَكْسِبُ {வ தக்ஸிபு(B)} உழைக்கிறீர்கள். الْمَعْدُومَ {அல்மஃதூம} வறியவர்களுக்காக, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் : 966

﷽ உபதேசம் : 966 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை நபி (ஸல்) அவர்கள் இரவின் - ஆரம்பப்பகுதி, நடுப்பகுதி மற்றும் இறுதிப்பகுதி என எல்லா நேரங்களிலும் வித்ர் தொழுபவா்களாக இருந்தாா்கள். சில சமயம் அவர்களுடை வித்ர் தொழுகை சஹர் நேரம் வரை நீண்டுவிடும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-1355

குர்ஆன் வசனம் 716

﷽ குர்ஆன் வசனம் 716 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَۙ ‏﴿۲۷﴾ لِمَنۡ شَآءَ مِنۡكُمۡ اَنۡ يَّسۡتَقِيۡمَؕ ‏﴿۲۸﴾ இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை. [அல்குர்ஆன் 81:27-28]

நற்பண்புகள். ( 9 )

நற்பண்புகள். ( 9 ) பாவமன்னிப்புக் கோருவீர்! "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்'' (என்றார்) திருக்குர்ஆன் 11:90 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான். என அனஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 6309. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 8 )

ஹதீஸ் கற்போம். ( 8 ) وَتَحْمِلُ الْكَلَّ வ தஹ்மிலுல் கல்ல சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். ஸஹீஹ் புகாரி : 3. وَتَحْمِلُ {வ தஹ்மிலு} தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள். الْكَلَّ {அல்கல்ல} சுமைகளை, 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் : 965

﷽ உபதேசம் : 965 17-02-2024 சனிக்கிழமை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை குறித்துக் கேட்டார். அதற்கு "(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும்! சுப்ஹு (நேரம் வந்துவிட்டதோ) என்று நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுது கொள்ளுங்கள்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1364

குர்ஆன் வசனம் 715

﷽ குர்ஆன் வசனம் 715 17-02-2024 சனிக்கிழமை وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفۡسَ عَنِ الۡهَوٰىۙ‏ فَاِنَّ الۡجَـنَّةَ هِىَ الۡمَاۡوٰىؕ‏ யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம். [அல்குர்ஆன் 79:40-41]

நற்பண்புகள். ( 8 )

நற்பண்புகள். ( 8 ) இறைவனிடம் அவசரம் கூடாது! என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. திருக்குர்ஆன் 19:4 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 6340. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 7 )

ஹதீஸ் கற்போம். ( 7 ) إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ இன்னக லதசிலுர் ரஹிம. தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள். ஸஹீஹ் புகாரி : 3. إِنَّكَ {இன்னக} தாங்கள். لَتَصِلُ {லதசிலு} இணங்கி இருக்கிறீர்கள். الرَّحِمَ {அர்ரஹிம} உறவினர்களுடன், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺

உபதேசம் : 964

﷽ உபதேசம் : 964 16-02-2024 வெள்ளிக்கிழமை "தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கும் விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2549

குர்ஆன் வசனம் 714

﷽ குர்ஆன் வசனம் 714 16-02-2024 வெள்ளிக்கிழமை فَاَمَّا مَنۡ طَغٰىۙ‏ ﴿۳۷﴾ وَاٰثَرَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۙ ‏﴿۳۸﴾ فَاِنَّ الۡجَحِيۡمَ هِىَ الۡمَاۡوٰىؕ‏ ﴿۳۹﴾ யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம். [அல்குர்ஆன் 79:37-39]

நற்பண்புகள். ( 7 )

நற்பண்புகள். ( 7 ) தவறாக பிரார்த்திக்காதீர்! அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! திருக்குர்ஆன் 10:106 நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)" என்று சொன்னார்கள். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார். ஸஹீஹ் முஸ்லிம்:5736. 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻

ஹதீஸ் கற்போம். ( 6 )

ஹதீஸ் கற்போம். ( 6 ) مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا மா யுஹ்ஜிய்கல்லாஹு அபதா. அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். ஸஹீஹ் புகாரி : 3. مَا يُخْزِيكَ {மா யுஹ்ஜிய்க} உங்களை இழிவுபடுத்தமாட்டான். اللَّهُ {அல்லாஹு} அல்லாஹ். أَبَدًا {அபதா} ஒருபோதும், 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺