﷽ உபதேசம் 948 31-01-2024 புதன்கிழமை நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்லுகையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்பொழுது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1006
﷽ குர்ஆன் வசனம் 697 30-01-2024 செவ்வாய்க்கிழமை அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். [அல்குர்ஆன் 70:11-14]
﷽ உபதேசம் 947 30-01-2024 செவ்வாய்க்கிழமை "படுக்கைக்கு செல்வதற்கு முன் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றவர்கள் விடியும் வரை வானவர்களுடைய பாதுகாப்பில் இருக்கின்றனா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2311
﷽ உபதேசம் 946 29-01-2024 திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாய் இருந்தார்கள்! அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-608
﷽ உபதேசம் 945 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபொழுது "அறையிலுள்ள தொழுகை விரிப்பை எடு!" என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!" என்றேன். அதற்கு அவர்கள், "மாதவிடாய் என்பது உன் கையில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை!" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-502
﷽ உபதேசம் 944 27-01-2024 சனிக்கிழமை "உங்களில் ஒருவர் இயற்கைக்கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்! பின்னோக்கவும் வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-440
﷽ உபதேசம் 943 26-01-2024 வெள்ளிக்கிழமை "1) மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2) தஜ்ஜால் தோன்றுதல் 3) பூமியிலிருந்து வெளிப்படும் அதிசயப்பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன்பு ஈமான் கொள்ளாத அல்லது ஈமான் கொண்டிருந்தும் நன்மை ஏதும் செய்யாத மனிதா் அப்பொழுது ஈமான் கொள்வது பயனளிக்காது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-249
﷽ உபதேசம் 942 25-01-2024 வியாழக்கிழமை "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த இறுதிச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் மார்க்கத்தைப் பற்றிப் கேள்விப்பட்ட பிறகு நான் கொண்டுவந்த மார்க்கத்தை நம்பிக்கை கொள்ளாமல் மரணித்தால்ல் அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-240
﷽ உபதேசம் 941 24-01-2024 புதன்கிழமை நபி (ஸல்) அவர்களிடம் "மனக்குழப்பம்" குறித்து கேட்கப்பட்டதற்கு, "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முஸ்லிம்-211
﷽ உபதேசம் 940 23-01-2024 செவ்வாய்க்கிழமை அல்லாஹ்வின் தூதரே! கடமையான தொழுகையை நிறைவேற்றி, மார்க்கத்தில் விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கம் செல்வேனா? என்று ஒருவா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு "ஆம்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 16
﷽ உபதேசம் 939 22-01-2024 திங்கட்கிழமை "அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கி அருளவில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி) திர்மீதி - 1961
﷽ உபதேசம் 938 21-01-2023 ஞாயிற்றுக்கிழமை "பல் துலக்குவது பற்றி அதிகமாக உங்களை நான் வலியுறுத்தியுள்ளேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 888
﷽ உபதேசம் 937 20-01-2024 சனிக்கிழமை நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தமது கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி-2096
﷽ உபதேசம் 935 18-01-2023 வியாழக்கிழமை "அல்லாஹ் தனது படைப்புப் பணியை நிறைவு செய்தபிறகு தன்னிடமுள்ள அரியாசனத்தின் மீது "என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று எழுதினான்!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-7422
﷽ உபதேசம் 934 17-01-2024 புதன்கிழமை "கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் அல்லது விழிப்பில் என்னைக் கண்டவரைப் போன்றவராவார். (ஏனெனில்,) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-4560
﷽ உபதேசம் : 933 16-01-2023 செவ்வாய்க்கிழமை ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து வியாபாரங்களில் தான் ஏமாற்றப்படுவதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ வியாபாரத்தின்பொழுது உன்னை ஏமாற்றுபவா்களிடம் வியாபாரத்தில் 'ஏமாற்றுதல் கூடாது' என்று கூறிவிடு' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி - 6964
﷽ உபதேசம் 932 15-01-2024 திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்களிடம் வந்த ஒரு மனிதா் "மறுமை நாள் எப்பொழுது வரும்?" என்று கேட்க "அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று நபி ஸல் அவா்கள் அந்த மனிதாிடம் கேட்டார்கள். அதற்கு அவா் "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "நீ நேசித்தவர்களுடன் தான் மறுமையில் இருப்பாய்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை! அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி-3288
﷽ உபதேசம் 931 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை "இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) புகாரி - 6916
﷽ உபதேசம் 930 13-01-2023 சனிக்கிழமை "உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெற்றால் அந்த பாவத்தில் ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு உண்டு!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 6867
﷽ உபதேசம் 929 12-01-2024 வெள்ளிக்கிழமை "ஒா் அடியான் ஆரோக்கியமானவனாகவும் உள்ளூரிலிருக்கும் நிலையிலும் செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற அதே நற்பலன் அவன் நோயாளியாகிவிடும்பொழுதும் அல்லது பயணத்தில் இருக்கும்பொழுதும் அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை அவனுக்கு எழுதப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி) புகாரி - 2996
﷽ உபதேசம் : 928 11-01-2024 வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபொழுது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக்கண்டு அவரைப்பற்றி மக்களிடம் கேட்டார்கள். "இவர் பெயர் அபூ இஸ்ராயீல். இவர் நின்று கொண்டே இருப்பேன் என்றும் நிழலில் ஒதுங்கமாட்டேன் என்றும் யாரிடமும் பேசமாட்டேன் என்றும் நோன்பு நோற்பேன் என்றும் நேர்ச்சை செய்துள்ளாா்" என்று மக்கள் கூறினா். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை மட்டும் நிறைவு செய்யட்டும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 6704
﷽ உபதேசம் : 927 10-01-2024 புதன்கிழமை "ஒா் அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன்மீது எந்தப்பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஃது (ரலி) திர்மிதீ-2322
﷽ உபதேசம். 926 09-01-2023 செவ்வாய்க்கிழமை "ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்! ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு அழைத்தச் செல்லும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நஸயீ-1560
﷽ உபதேசம் 925 08-01-2023 திங்கட்கிழமை "உங்களில் ஒருவா் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரைக் கண்டால் அவற்றில் தம்மைவிடக் கீழனாவர்களை அவா் நினைத்துப் பார்க்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-6490
﷽ உபதேசம் : 924 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை நபி (ஸல்) அவர்கள் மனிதா்களிலேயே மிக அழகிய பண்புகளைக் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) முஸ்லிம்-4627
﷽ உபதேசம் : 923 06-01-2024 சனிக்கிழமை "இறந்த பூமியை உயிர்பிப்பவருக்கு நன்மையுண்டு. மேலும் உணவைத் தேடக்கூடிய மனிதா்கள், கால்நடைகள் மற்றும் பறவைகள் அதிலிருந்து உணவு உட்கொண்டால் அவருக்கு அது தர்மமாகிவிடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) இப்னு ஹிப்பான்-5204
﷽ உபதேசம் : 922 05-01-2024 வெள்ளிக்கிழமை நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிபுடைய மரண வேளையில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வேன்" என்று கூறியபொழுது அவர் அதை மறுத்துவிட்டார். அப்பொழுது "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-47
﷽ உபதேசம் : 921 04-01-2023 வியாழக்கிழமை "ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்ற இருவரில் முதலில் திட்டத் துவங்கியவரையே குற்றம் சாரும்! அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-5046
﷽ உபதேசம் : 919 02-12-2023 செவ்வாய்க்கிழமை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாகும்பொழுது விடுபட்ட நோன்புகளை களாச் செய்யுமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-508
﷽ உபதேசம் : 917 01-01-2024 திங்கள்கிழமை நபி (ஸல்) அவர்கள் தொடா் நோன்பு நோற்கத் தடை விதித்தபொழுது "நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1962
. 🪙 🪙 🪙 🪙 🪙 🪙 🪙 🔹 இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு 🔸 🔜 நபிமொழி 🔚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் 3512 =============== “உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை, நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட, நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி 3456